கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் கொண்டு வந்த நெல்மூட்டைகளை சட்டவிரோதமாக மாற்ற முயற்சி செய்ததாக லாரியை சிறை பிடித்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், நள்ளிரவில் லாரியில் வியாபாரிகளின் 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளை ஏற்றி வந்து சட்டவிரோதமாக அங்குள்ள ஊழியர்களின் உதவியோடு நேரடியாக மாற்ற முயற்சி செய்துள்ளனர்.