உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி சுங்கச் சாவடியை புரட்சி பாரதம் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 38 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், 100 கிலோ மீட்டருக்கும் குறைவாக உள்ள காலாவதியான சுங்கச் சாவடியை அகற்றக் கோரியும் முற்றுகையிட முயன்ற புரட்சி பாரதம் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.