புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட நான்கு கிரசர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். துளையானூரில் சுப்பையா என்பவருக்கு சொந்தமான கிரசர், சந்தன விடுதியில் ஆரோக்கிய அன்னை கிரசர், மெய்யபுரத்தில் மோகன் ராஜ் என்பவருக்கு சொந்தமான கிரசருக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த கிரசர்களில் பதுக்கி வைக்கப்பட்ட 12 ஆயிரம் டன் ஜல்லி கற்கள் மற்றும் எம்-சாண்ட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.