செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுக்க வந்த வருவாய்த்துறை அதிகாரியை பொதுமக்கள் சிறைபிடித்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொழிச்சலூர் விநாயகம் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அரசு நிலத்தை ஆக்கிரமித்து இந்த வீடுகள் கட்டப்பட்டதாகவும், அவைகளை காலி செய்யக்கோரி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நோட்டீஸ் வழங்க அப்பகுதிக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பெண்கள், அந்த இருவரையும் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் நோட்டீஸ் வழங்காமல் திரும்பி சென்றனர்.