உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அவசர கதியில் அதிக அளவில் நடத்துவதை தவிர்த்து, பணிச்சுமையை குறைக்க வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் 450 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால் வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.