பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும், போக்குவரத்து கழகத்தை தனியார் மயப் படுத்தும் நடவடிக்கையை கைவிட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கர்ஷன் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமடையும் என்றார்.