ராமநாதபுரத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான தந்தை இறந்ததை மறைத்து, தொடர்ந்து அவரது பென்ஷன் பணத்தை மோசடியாக பெற்று வந்த மகனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் சண்முகம், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதமே இறந்து விட்டார். இதனை 2022 வரை மாவட்ட கருவூல அலுவலரிடம்தெரிவிக்காமல் மறைத்த அவரது மகன் சரவண பாபு, தந்தையின் பென்ஷன் பணத்தை தொடர்ந்து ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து வந்துள்ளார். இது தெரிய வர சரவண பாபுவை நேரில் அழைத்து மோசடியாக எடுத்த பணத்தை கருவூலத்தில் திருப்பி ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். 8 லட்சத்து 84 ஆயிரத்துக்கு பதில், 30 ஆயிரத்தை மட்டுமே கொடுத்த சரவணபாபு தலைமறைவான நிலையில், அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்தனர்.