சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவனை போலீசார் கைது செய்தனர். தப்பி செல்ல முயன்ற போது தவறி விழுந்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மண்மலை கிராமத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.