மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் பகுதியில் உள்ள ஒஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் மீண்டும் பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எரிவாயு எண்ணெய் கிணறுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருந்து வரும் நிலையில் கடந்த மாதம் மராமத்து பணி என்ற பெயரில் புதுப்பிக்கும் பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.