மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பை இந்திராணி ராஜினாமா செய்ததை அடுத்து, துணை மேயர் நாகராஜன் தலைமையில் மாமன்றத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் வரி வசூலிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் கைதாகி ஜாமினில் வெளியே வந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக ராஜினாமா செய்வதாக இந்திராணி தெரிவித்துள்ளார். இந்நிலையில், துணை மேயர் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி ஆணையரிடம் இந்திராணி அளித்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேயர் இந்திராணி தமது ராஜினாமா கடிதத்தில் குடும்ப சூழல் காரணமாக ராஜினாமா, எனக் கூறியுள்ளார். மாமன்ற அவசர கூட்டத்தில் மேயர் ராஜினாமா கடிதம் ஏற்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாமன்ற கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.