இராமநாதபுரம் மாவட்டம் மாதவனூர் அருகே ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், கிணறு தோண்டும் பணிக்காக கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளித்த நிலையில், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த பணி நடக்காது என தமிழக அரசு உறுதி அளித்தது. இந்நிலையில், அலுமனந்தல் பகுதியில் கண்மாய் கரையில் 3 இயந்திரங்கள் மூலம் கிணறு தோண்டும் பணி தொடங்கப்பட்டதால் விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர்.