திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிப்பவர்கள் திடீரென பேருந்துகளை சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு வசிப்பவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்த வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையொட்டி, மாற்று இடம் கொடுத்தால் செல்ல தயாராக இருப்பவர்கள், தயாராக இல்லாதவர்களை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, மாற்று இடத்துக்கு செல்ல தயாராக இல்லாதவர்களை வீட்டின் முன்பு நிற்கவைத்து புகைப்படம் எடுத்ததாகக் கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.