திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட வேளகாபுரம் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, உடைந்து விழும் தருவாயில் உள்ளதால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.23 குழந்தைகள் இப்பள்ளியில் பயின்று வரும் நிலையில், குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் எந்நேரம் வேண்டுமானலும் ஆபத்து ஏற்படலாம் எனவும் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மாவட்ட கல்வி நிர்வாகம் நீர் தேக்கத் தொட்டியை அகற்றி, குரங்குகளை பிடித்து வனத்துறையில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.