கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்தில் தாயை பிரிந்து, கடந்த மே மாதம் 26ஆம் தேதி மீட்கப்பட்ட குட்டியானை, பாகன்களின் சொல்பேச்சை கேட்டு வருகிறது. டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமுக்கு கொண்டு வரப்பட்ட யானை குட்டி, தற்போது பாகன்களுடன் பழக ஆரம்பித்துள்ளது. பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் மீட்கப்பட்ட ஆண் யானை குட்டி தனி கூண்டில் வைத்து, முருகன் மற்றும் கண்ணன் ஆகிய பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. பால் மட்டுமே குடித்து கொண்டிருந்த யானை தற்போது புற்களை உண்ணும் அளவிற்கு வந்துள்ளதாகவும், தங்களது பேச்சை கேட்டு நடந்து கொள்வதாகவும் பாகன்கள் தெரிவித்தனர்.