சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த முதியவரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் உள்ள மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த அப்பாராவ் என்ற அந்த முதியவர், ஊருக்கு செல்ல வழி தெரியாமல், கொத்தடிமையாக ஆடு மேய்த்து வந்திருக்கிறார்.