பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் பின்புறம் மீட்கப்பட்டது.தெற்கு பிச்சாவரம் மாதா கோவில் தெருவில் ஆட்கள் யாருமில்லா வீட்டின் பின்புறம் பச்சிளங்குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனைதொடர்ந்து அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.