மாயிலாடுதுறை நகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில் பிறந்த சில மணி நேரமேயான பெண் குழந்தையை பிளாஸ்டிக் பக்கெட்டில் மூடி வைத்துவிட்டு மாயமான தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை மீட்ட கழிப்பிடத்தை நிர்வகிக்கும் ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.