பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலைப்போக்குவரத்து மற்றும் மகளிர் சுகாதார வளாகத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வசிஷ்டபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழரசி என்ற தனிநபர் சாலையை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.