ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் கல்லூரி மாணவிகள் அரசு பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த போது, அதன் ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை எடுத்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் அலட்சியமாக செயல்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.