திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி மக்கள் முற்றுகையிட்டுப் போராடினர். எடமேலையூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் அப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.