ஈரோடு மாவட்டம் பவானி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில், ஐந்து ஜங்ஷன் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குருப்பநாயக்கன்பாளையம் முதல் லட்சுமி நகர் கோணவாய்க்கால் வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இன்னும் முறையாக திறக்கப்படவில்லை. இந்நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.