மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலூட்டும் அறை இல்லாததால், பல்வேறு பணிகளுக்காக ஆட்சியரகம் வரும் தாய்மார்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சமூகநலத்துறை சார்பில் ONE STOP CENTER பணியாளர்களுக்கான நேர்காணல் ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்க பச்சிளம் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், அங்குள்ள மரக்கிளையில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு தனது தாயை பாதுகாப்புக்கு விட்டுச் சென்றார். மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களும் இதே போல் சிரமத்துக்கு ஆளாவதால், தனியாக பாலூட்டும் அறை மற்றும் ஓய்வறை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.