வேலூர் மாவட்டம் குடியாத்தம்அருகே அடிக்கடி பழுதடையும் மின்மாற்றியை சீரமைக்க கோரி அதற்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடியப்பனூரில் உள்ள மின்மாற்றி சில மாதங்களுக்கு முன்பு பழுதான நிலையில், அதனை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் தங்களிடம் பணம் வசூலித்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்