கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகைக்கு கரும்புடன் சேர்த்து மஞ்சள் வழங்கி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் 500 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும், பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் மஞ்சளையும் சேர்த்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.