மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் விதிமுறைகளை மீறி 40 அடி ஆழம்வரை மண் எடுக்கப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மண் குவாரிகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரி, கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.