திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்த கல்வித்துறை தட்டச்சர்கள் சங்கத்தினர், பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி மனு அளித்தனர். இரண்டாயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் அவர்கள் பணியமர்த்தப்படவில்லை என கவலை தெரிவித்தனர்.