தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜீவா நகரில் தூண்டில் வளைவு அமைத்து கடல் சீற்றத்தில் இருந்து கிராமத்தை காக்க வேண்டும் என நாட்டுப் படகு ஊர் நல கமிட்டியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஜீவா நகர், கடல் சீற்றத்தால் தீவு போல காட்சியளிப்பதாகவும் பலமுறை ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிக்கையில், 5.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி சேர்க்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், அதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.