கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.