தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னை கொளத்தூரில் பெரியார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்துவைத்து பேசிய முதலமைச்சர், இதனை தமது பிறந்தநாள் திட்ட அறிவிப்பாக வெளியிடுவதாகவும் கூறினார்.