சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்த தங்களை போலீசார் தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் பேசிய வீடியோ வெளியான நிலையில், அதை போலீசார் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 10 வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில், சிறுமியின் மாமா மகனான 14 வயது சிறுவன் தான் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதற்கிடையில் காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டுவது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அத்தகவல் பொய்யானது என காவல்துறை தெரிவித்ததாக கூறப்படுகிறது.