காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கஞ்சா வைத்திருந்ததாக நகராட்சி திமுக கவுன்சிலரை போலீஸார் கைது செய்தனர். விஆர்பி சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் வீரபத்திரன் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.