சென்னை அண்ணா சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைன் பழுது ஏற்பட்டு இரண்டு பெண்கள் 20 நிமிடங்களாக அந்தரத்தில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரோப் கார் கிராவிட்டியில் இயங்குவதால் குறைவான எடை உடையவர்கள் செல்லும் போது வேகம் குறையும் எனவும், இது பெரிய பழுது இல்லை என்றும் அதன் பொறியாளர் விளக்கமளித்துள்ளார்.