கோவையில் வாங்கி ஐந்து நாட்களே ஆன புதிய பென்ஸ் கார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பழுதாகி நிற்க, அதன் உரிமையாளர், விற்பனை மைய ஊழியர்கள் உதவியுடன் காரை தள்ளி செல்லும் நிலைக்கு ஆளானார். கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வடகோவை சுந்தரம் மோட்டார்ஸ் பென்ஸ் கார் விற்பனை மையத்தில், கடந்த வாரம் புதிய பென்ஸ் காரை வாங்கியுள்ளார். வாங்கி 5 நாட்களே ஆன காரில் பழுது ஏற்பட அதனை சரிசெய்ய விற்பனை மையத்திற்கு வந்தவர் பழுதை நீக்கிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்ற போது கார் மீண்டும் பழுதாகி நின்றது. இதனால் கோபமடைந்த அதன் உரிமையாளர் விற்பனை மைய மேலாளரிடம் செல்போனில் வாக்குவாதம் செய்தார்.