ஈரோடு மாவட்டம் ஆர்.கே.வி சாலையில் நவீன முறையில் மறுசீரமைக்கப்பட்ட நேதாஜி வணிக வளாகத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. நேதாஜி காய்கறி மற்றும் பழங்கள் சந்தை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டு மாநகராட்சி சார்பாக 30 கோடி ரூபாயில் மறுசீரமைக்கப்பட்டது.