திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் பொதுக் கழிப்பிடத்தை புதுப்பிக்க 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பெயிண்ட் மட்டும் அடித்து விட்டு கணக்கு காட்டப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆரம்ப துணை சுகாதார நிலையம், குழந்தைகள் வளர்ச்சி மைய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வரும் நிலையில், அங்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. அதில் கதவு, ஜன்னல், தண்ணீர் டேங்க், குழாய்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றதால், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் 1.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.