சென்னையில், வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திராவிடக் கட்டடக் கலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறளின் உலகப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம், நூலகத்துடன் கூடிய ஆய்வரங்கம், கருத்தரங்க அறை, புத்தக நிலையம் மற்றும் 160 கார்கள் நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.