கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாற்று இடம் வழங்க கோரியும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மழைக்காலம் என்பதால் தங்களுக்கு மாற்று இடம் தேவைப்படுகிறது என்று வலியுறுத்திய மக்கள், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றனர்.