திருவள்ளூர் அருகே உயர்நீதிமன்ற உத்தரவின் படி 5 கோடி மதிப்பிலான அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள், தகரக் கொட்டகை மற்றும் கீற்றுக் கொட்டகைகளை மட்டுமே இடித்து அகற்றி வீடியோ எடுத்து சென்றனர்.ஏனம்பாக்கம் ஊராட்சி மேல்மாளிகைபட்டு பகுதியில் 5 கோடியே 29 லட்ச ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் பேரில் வந்த ஊத்துக்கோட்டை வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீயணைப்புத்துறை வாகனம், ஜேசிபி சகிதம் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.ஆனால் கீற்றுக் கொட்டகைகளை மட்டும் அகற்றி நாடகமாடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.