சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய போக்குவரத்து போலீசார், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அப்புறப்படுத்தினர். தாம்பரம், குரேம்பேட்டை சாலைகளில் காலை, மாலை நேரங்களில் அதிகமாக வாகனங்கள் பயணிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், வாகனங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுப்பட்டனர்.