ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மத நல்லிணக்க விழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு மெகா விருந்து வைக்கப்பட்டது. சீவலாதி கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான கண்டுமேக்கியார் தர்காவில் இந்துக்களும் ஒன்றிணைந்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர், தர்கா வாசலில் நடைபெற்ற மெகா விருந்தில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிலையில், அனைவருக்கும் விபூதி, குங்குமம், வெல்லம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.