கரூர் மாவட்டம் கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணையில் இருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,பாசனத்திற்காக திறந்து வைத்தார்.நொய்யல் பிரதான வாய்க்கால் மூலம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.90 நாட்கள் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் புகளூர், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.