நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த கோத்தகண்டி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் சேதம் அடைந்துள்ளதால் வெலிங்டன் ராணுவ மையம் உட்பட 31 கிராமங்களுக்கு கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. எமரால்டு அணையில் இருந்து திறக்கப்படும் 1000 கன அடி உபரி நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்லும் பாலம் சரிந்து விழுந்தது. இதனால் குடிநீர் நீர் வீழ்ச்சி போல் கொட்டி வீணாகும் நிலையில் குழாய்களை சரி செய்யும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.