தூத்துக்குடியில் மருமகளை பற்றி தவறாக பேசிய மாமனார் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். பூ.பாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த அழகுமுத்து மகன் சரவணனின் மனைவி ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி, அடிக்கடி கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவரது உறவினர்கள் குமார், முனியசாமி ஆகியோரிடம் விஜயலட்சுமியின் நடத்தை குறித்து அழகுமுத்து தவறாக பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்தோணி சேசுராஜ், ஆறுமுகம் ஆகியோரை அழைத்து வந்து அழகுமுத்துவை கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க முயன்ற அவரது மருமகன்கள் மாரீஸ்வரன், மார்க்கண்டேயன் ஆகியோரையும் கத்தியால் குத்தினர்.