நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாயக்கழிவு நீரால் உறவினர்களே பெண் கொடுக்க மறுப்பதாக கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றபோது, அதிமுக கவுன்சிலர் சம்பூர்ணம், செந்தில் ஆகியோர், சட்டவிரோத சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், தோல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர். சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் சாய ஆலைகள்மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.