தேனி அருகே கல்குவாரி விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள சங்கிலிக்கரடு கல்குவாரி விவகாரத்தில் சசி என்கிற சதீஷ்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சதீஷ்குமாரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உறவினர்களுடன் போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.