தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பீகார் மாநில இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனிடையே , உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட இளைஞரின் சடலம் அரசியல் கட்சியினர் உள்ளிட்டோரின் நிதி உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.