வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரருக்கு இழப்பீடு வழங்க கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றிய 35 வயதான ராஜேஷ், பணி முடிந்து தனது இருக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மசிகம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.