பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய லட்சுமணன் என்பவரை ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறை கைது செய்து என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென என ஆட்சியரகத்தை அவர்கள் முற்றுகையிட்டு வலியுறுத்தினர்.