திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய போதிய குளிரூட்டும் இயந்திரங்கள் இல்லாததால், அவசர பிரிவில் இறந்தவரின் சடலத்தை வைத்து நீண்ட நேரம் காத்திருப்பதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். ஒண்டிகுடிசை பகுதியில் விவசாயி கண்ராயன் மற்றும் கொரட்டூர் பகுதியை சார்ந்த விஜயா என்பவர் உயிரிழந்த நிலையில் இரண்டு உடல்களையும் நீண்ட நேரங்களுக்கு பிறகு வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.