தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தியதாக கூறப்படும் இளைஞரை கைது செய்ய கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அற்புத மேரி என்ற மாற்றுத்திறனாளி பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில், தேனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணையும், அவருடன் நின்றிருந்த இளைஞரையும் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.